நாடாளுமன்றத்தின் குழு அறையிலிருந்து 2 தலையணைகளும் ஒரு மெத்தையும் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் செய்தி பொய்யானது என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வீட்டுப் பராமரிப்புத் துறை குறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் மூவரடங்கிய குழுவொன்றைத் தாம் நியமித்துள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பான தகவல்களை குறித்த விசாரணைக்குழு உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் சந்தித்து அல்லது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் ஊடாக தெரியப்படுத்தவதற்காக நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.