Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாம்பு கடித்து ஒரு வயதுடைய குழந்தை பலி

பாம்பு கடித்து ஒரு வயதுடைய குழந்தை பலி

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் பாம்பு கடித்து ஒரு வயதுடைய குழந்தை நேற்று (16) உயிரிழந்துள்ளது.

இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது விஷப் பாம்பு குறித்த குழந்தையை கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, ​​குழந்தையின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles