Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

தங்காலை – குடாவெல்ல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் நாக்குளுகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் நாக்குளுகமுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் வெளியாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles