ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக வைத்தியர் சங்கங்களின் சம்மேளனம், மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துரையாடல் கோரி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்தமையே இதற்குக் காரணமாகும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி அலுவலகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.