நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் பல மருத்துவமனைகளில் சி.டிஇ எம்.ஆர்.ஐ.இ பி.இ.டி.இ போன்ற பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் தர்மகீர்த்தி அப்பா தெரிவித்தார்.
இரத்தினபுரி, காலி, பதுளை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாரிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.