கடந்த காலங்களில் வேகமாக அதிகரித்து வந்த மீன்களின் விலை தற்போது குறைந்துள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உபுல் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று ஒரு கிலோ லின்னோ கிலோ 400-500 ரூபாவாகவும், கெலவல்லா கிலோ 1100 ரூபாவாகவும், கணவாய் கிலோ 700 ரூபாவாகவும், பலயா கிலோ 700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.