Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுதேச மருத்துவத் துறையை மேம்படுத்த நடவடிக்கை

சுதேச மருத்துவத் துறையை மேம்படுத்த நடவடிக்கை

சுதேச மருத்துவத் துறையை அந்நியச் செலாவணியை உருவாக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட ஒரு தொழிலாக மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு கூட்டுப் பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆரோக்கியமான சனத்தொகையைக் கட்டியெழுப்புவதற்காகவும், சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் சுதேச மருத்துவ முறையிலும் ஆயுர்வேத முறையிலும் பல புதிய போக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles