சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து வகைக்கு சொந்தமான வாகனங்களை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடு அமுலான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி கிடைக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.