Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டம்

சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டம்

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் உரிய முறையில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சம்பளத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள போராட்டக்காரர்கள் உரிய தீர்வுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐவருக்கு மட்டும் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடலுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles