எல்ல பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குளவி தாக்குதலுக்கு உள்ளாவதை தடுப்பதற்காக எல்ல பிரதேச செயலகத்தின் முயற்சியின் கீழ் பாதுகாப்பு சாவடி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் குளவி தாக்குதலுக்கு உள்ளானதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.