இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (15) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அதற்கிணங்க, இறக்குமதி கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் கடைப்பிடித்து இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளால் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பல பொருட்கள் தொடர்பான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.