Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு, வாகனத் திருட்டு மற்றும் வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கையில் சமீபத்திய குறிப்பிடத்தக்க அதிகரிப்பு போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுடன் தொடர்புடையது.

கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், போதைப்பொருள் குற்றவாளிகள் நாட்டில் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பொலிஸாரால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளை கையாள்வதன் மூலம் குற்ற விகிதம் கணிசமாக குறையும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்கான ஆழமான அறிவை வழங்குவதற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles