தற்போதைய வரட்சியின் தாக்கத்தினால் வரலாற்றில் அதிகளவான பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகையை இவ்வருடன் செலுத்த வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடுவது தற்போது கடினமாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.
வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாய உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.