மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பொலிஸ் பிரதி மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது.
இதனை அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கணக்கினை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.