Tuesday, July 22, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது தேவையாகும் - ஜனாதிபதி

எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது தேவையாகும் – ஜனாதிபதி

கடந்த காலங்களில் நாடும், மக்களும் எதிர்கொண்ட துரதிஷ்டவசமான யுகத்திற்கு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்காத வகையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் வெற்றியடைவதால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்றும், சரியான தீர்மானங்களுடன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதிதாக சிந்தித்து, புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லாவிட்டால், இன்னும் 10 வருடங்களில் நாடு மற்றொரு பொருளாதார சவாலை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்தார்.

மாத்தளை புனித தோமஸ் ஆண்கள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு விழாவில் நேற்று (13) முற்பகல் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துத் துறைகளையும் நவீனமயமாக்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தனது எதிர்பார்ப்பு என்றும், அதற்கு அவசியமான தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்ள, தொழில்நுட்ப ஊக்குவிப்பு சபை மற்றும் நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்த டிஜிட்டல் மாற்ற ஆணைக்குழு ஆகியவற்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles