உலகின் 25 நாடுகளில் உயரம் குறைந்த மனிதர்கள் வாழ்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆசியாவின் திமோரில் உள்ள லெந்தே என்ற இடத்தில் மிகக் குட்டையானவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீவில் வாழும் ஒரு ஆணின் சராசரி உயரம் 5 அடி 2.9 அங்குலம். பெண்ணின் சராசரி உயரம் 4 அடி 11.5 அங்குலமாகும்.
லாவோஸ், மடகஸ்கர், குவாத்தமாலா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் உயரம் குறைந்த மனிதர்கள் அதிகம் உள்ள நாடுகளாக தெரியவந்துள்ளன.
நேபாளம், ஏமன், ஆண் தீவுகள், பங்களாதேஷ், கம்போடியா, இந்தோனேசியா, மலாவி, ருவாண்டா, இந்தியா, வியட்நாம், பெரு, பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள், மொசாம்பிக், பூட்டான், புருனே, மியான்மர், சைபீரியா, இலங்கை ஆகிய 25 நாடுகளில் அதிகமான உயரம் குறைந்த மனிதர்கள் உள்ளனர்.