அஸ்வெசும திட்டம் தொடர்பான மேல்முறையீடுகள் இன்று(14) முதல் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஆட்சேபனைகளை ஆராய்வதற்கு தேவையான அனைத்து அறிவுரைகளும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஆட்சேபனைகளை 5 நாட்களுக்குள் ஆராய்ந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.