கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 120 வைத்தியர்கள் தமது சேவை ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார்.
வைத்தியர் ஒருவர் வெளிநாட்டில் நிபுணத்துவப் பயிற்சி பெற்று இலங்கைக்கு வந்த பின்னர், குறைந்தது 8 வருடங்கள் இலங்கையில் பணியாற்றுவதே வழமையான நடைமுறையாகும்.
விசேட வைத்தியர் ஒருவரை பயிற்றுவிப்பதற்கு அரசாங்கத்திற்கு 12 முதல் 15 மில்லியன் ரூபா வரை செலவாகிறதாக அவர் சுட்டிக்காட்டினார்.