தென் மாகாணத்தில் அம்பியூலன்ஸ் சாரதிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அரசாங்க விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகளுக்கு அனுமதி வழங்கப்படாமை மற்றும் மேலதிக நேரங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் அம்புலன்ஸ் போக்குவரத்து சாரதி சேவை சங்கம் தெரிவித்துள்ளது.