வெள்ளவத்தைபிரதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று (13) மாலை கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கரந்தகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
நபரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.