Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் கைது

14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் கைது

தனது 14 வயது மகளை பாலியல் தொழில் ஈடுபடுத்திய தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக திவுலப்பிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை இறந்துவிட்டதாகவும், நான்கு பிள்ளைகளின் தாயான சந்தேகநபர் வீட்டுக்கு பல்வேறு நபர்களை அழைத்து வந்து ஒவ்வொருவரிடமிருந்தும் 2000 ரூபாவை பெற்றுக்கொண்டு தனது மகளை வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சித்ரவதையை தாங்க முடியாத சிறுமி, பாடசாலை ஆசிரியை ஒருவரிடம் நடந்த சம்பவத்தை கூறியதையடுத்து, அந்த ஆசிரியை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles