மீரிகம – வில்வத்த பகுதியில் உரத்தை கொண்டு சென்ற லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அங்குள்ள சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 இலட்சம் ரூபா மதிப்பிலான நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனினும் ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட நட்டஈடு தொடர்பான மதிப்பாய்வு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.