Monday, September 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதீ விபத்தில் இளம் ஜோடி பலி

தீ விபத்தில் இளம் ஜோடி பலி

கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று (10) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மினுவாங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 29, 27 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்தனகல்ல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இருவரும் அந்தப் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வேளையிலேயே தீ விபத்தில் சிக்கியுள்ளனர்.

மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .கடும் தீக்காயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட கணவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles