Wednesday, January 21, 2026
22 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒன்லைன் மூலம் 50,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்

ஒன்லைன் மூலம் 50,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நேற்று காலை 8.30 மணி வரை 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பெறப்பட்ட விண்ணப்பதாரர்களில் 41,588 பேர் சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பித்துள்ளதுடன், 26,972 விண்ணப்பங்கள் அனைத்து ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அமைப்பின் கீழ் இதுவரை 6,405 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கூறியவர்களிடமிருந்து 14இ676 விண்ணப்பங்கள் குறைபாடுள்ள ஆவணங்களுடன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றை அனைத்து நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களுடன் மீண்டும் அனுப்புமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles