இந்த வருடம் மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த இறுதிப் திருவிழாவில் சுமார் மூன்று இலட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (09) மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றதுடன், பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
மடு திருவிழாவின் போது பாதுகாப்பிற்காக 1000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ளனர்.
இம்மாதம் 14ஆம் திகதி இரவும் 15ஆம் திகதி காலையும் நடைபெறும் ஆராதனைகளின் பின்னர் வருடாந்த மடு மங்கள உற்சவம் நிறைவடையும்.
இந்த பக்தர்களின் வசதிக்காக கொழும்பு கோட்டையில் இருந்து தினமும் காலை 6.15 மணிக்கு மடு சந்தி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.