Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவு செய்ய 260 மில்லியன் ரூபா செலவு

நெல் கொள்வனவு செய்ய 260 மில்லியன் ரூபா செலவு

நெல் சந்தைப்படுத்தல் சபை ஒரு மாதத்திற்குள் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய 260 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

ஜூலையில் திட்டங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து நிதி செலவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல காரணங்களுக்காக சில விவசாயிகள் தங்கள் நெல் இருப்புகளை சபைக்கு விற்பனை செய்ய தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சிறு மற்றும் பெரும் போகங்களில் ரூபா 95 முதல் 110 ரூபாவுக்கு இடையில் நெல்லை கொள்முதல் செய்ய கடந்த மாதம் அரசாங்கம் தீர்மானித்தது.

நிதி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles