இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் அனைத்து வகையான எரிபொருட்களையும் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு சினோபெக் நிறுவனம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு லீற்றர் எரிபொருளையும் எண்ணெய் கூட்டுத்தாபனத்தை விட 3 ரூபா குறைவாக விற்பனை செய்ய அனுமதிக்குமாறு சினொபெக் நிறுவனம் கோரியுள்ளது.
எனினும் அந்த கோரிக்கைக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரையில் பதிலளிக்கவில்லை.
ஒப்பந்தத்துக்கு அமைவாக, சினோபெக்கிற்கு மேலும் 20 எரிபொருள் நிலையங்களை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.