Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 69,000 மில்லியன் ரூபா இலாபம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 69,000 மில்லியன் ரூபா இலாபம்

2023 ஆம் ஆண்டின் ஏழு மாத காலப்பகுதியில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 69,000 மில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (9) வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியியல் ரீதியில் இலாபம் மற்றும் நட்டமடைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்காக கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் ஏதும் வழங்கப்படவில்லை மாறாக 4.2 சதவீத வட்டி என்ற அடிப்படையில் புத்தாண்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பெற்றோலிய விநியோகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து முறையற்ற வகையில் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles