2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு கிழக்கில் பெருமளவான காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று (09) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
தற்போது, 90 முதல் 92 வீதமான காணிகள் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அது 22,919 ஏக்கர்களாகும்.
இதில் 817 ஏக்கர் அரசாங்கத்திற்கும் 22,101 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது என அவர் வலியுறுத்தினார்.
பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் 3754 ஏக்கர் காணிகள் இருப்பதாகவும், அதில் 862 ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும், 2832 ஏக்கர் தனியார் காணிகள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.