Tuesday, September 16, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண சர்ச்சை: வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மின் கட்டண சர்ச்சை: வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தனது திருமண நிகழ்வுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், நிலுவையில் உள்ளதாக கூறப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துபூர்வமாக விளக்கமளிக்குமாறு மின்சார சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.

எனினும் அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்கான மின்சார கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே அண்மையில் தெரிவித்தார்.

அதன்படி, 2.6 மில்லியன் ரூபா நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles