நாட்டில் இதயநோயாளிகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி ஸ்டென்ட்களை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் போது, பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் நோயாளிகளின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, அரச மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைக்கு, காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட்கள் இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.