கல்முனையில் தரமற்ற கொத்தமல்லிக்கு இரசாயனங்களை கலந்து மீண்டும் பொதி செய்யும் களஞ்சியசாலையொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இரசாயனம் கலந்த 2,125 கிலோ கொத்தமல்லியும், தரமற்ற 82,750 கிலோ கொத்தமல்லியும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 44 வயதுடைய சந்தேக நபர் கல்முனைக்குடி 08 பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவராவார்.
அவர் மேலதிக விசாரணைகளுக்காக நுகர்வோர் அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.