Saturday, July 26, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலனுடன் மோதல்: உயிரை மாய்த்துக் கொண்ட யுவதி

காதலனுடன் மோதல்: உயிரை மாய்த்துக் கொண்ட யுவதி

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக யுவதி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்இ சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles