Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுபாகிஸ்தான் அணிக்கு இந்தியா செல்ல அனுமதி

பாகிஸ்தான் அணிக்கு இந்தியா செல்ல அனுமதி

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்துக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளது.

பிரம்மாண்ட ஐசிசி நிகழ்வுக்காக பாகிஸ்தான் அரசாங்கம் தேசிய அணிக்கு அனுமதி வழங்கிய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல்கள் இருந்த போதிலும் இந்த அனுமதி பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கம், தனது அணியின் பாதுகாப்பை பொறுத்தவரையில் இந்திய அரசை இன்னும் முழுமையாக நம்பவில்லை.

எனவே தனது அணி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles