ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (09) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து யோசனைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த விசேட அறிக்கையை வெளியிடவுள்ளார்.
இந்த அறிக்கையில் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
