யாழ்ப்பாணம் – அனலைதீவு பிரதேசத்தில் 13 வயதுடைய மாணவியை வன்புணர்ந்து தலைமறைவாகியிருந்த ஆசிரியர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் கடந்த ஜுலை 31ஆம் திகதி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாக மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் அவருக்குப் பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்கியிருந்தனர்.
மாணவி குறித்த ஆசிரியரின் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.