Wednesday, November 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியா சிறைச்சாலையின் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு

வவுனியா சிறைச்சாலையின் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு

தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07) முதல் நீக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா தடுப்புச் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கும் சிறை அதிகாரி ஒருவருக்கும் தட்டம்மை நோய் பரவியதையடுத்து, நோய் பரவலைக் குறைக்கும் நோக்கில் உடனடி நடவடிக்கையாக கடந்த 25ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதன்படி இன்று (07) முதல் கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளுமாறு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியரால் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles