புதிய ‘கொவிட்-19’ வைரஸ் திரிபு தற்போது பிரித்தானியா முழுவதும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டில் உள்ள மருத்துவர்கள் இந்த புதிய திரிபுக்குEG.5.1 / Eris என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும் இது ஒமிக்ரொன் வைரஸின் துணை திரிவு என்று கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் எரிஸ் வைரஸ் பரவல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.