Wednesday, November 12, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'சரிகமப' நடுவர்களை கண்கலங்க வைத்த மலையக சிறுமி

‘சரிகமப’ நடுவர்களை கண்கலங்க வைத்த மலையக சிறுமி

இந்திய தனியார் தமிழ் தொலைக்காட்சியான Zee tamil இல் ஒளிபரப்பாகும் ‘சரிகமப’ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையக சிறுமி அசானி பங்குபற்றியுள்ளார்.

கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த மாணவி கனகராஜ் அசானி நேற்றைய தினம் சரிகமப நிழ்ச்சியில் பாடினார்.

அவரது பாடலை கேட்ட நடுவர்கள் கண்கலங்கியதுடன், அவரை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பாடுவதற்கும் அனுமதியளித்துள்ளனர்.

‘ராசாவே உன்ன நம்பி ஒரு ரோசாப்பூ’ என்ற பாடலையே அசானி பாடியதுடன், எந்தவித இசை பயிற்சியும் முறையாக கற்றுக்கொண்டு அவர் பாடவில்லை என கூறப்படுகிறது.

தமது தன்னம்பிக்கையையே இவர் பாடலாக வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிழ்ச்சியில் கருத்து தெரிவித்த அசானிஇ

வானொலியில் ஒளிபரப்பாகிய பாடல்களை சிறு வயது முதல் கேட்டு மாத்திரம் பாட கற்றுக்கொண்டதாகவும் தமது தாய் தந்தையரே பாடுவதற்கு ஊக்குவித்தாகவும் கூறினார்.

தமது மக்களுக்காகவும் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவுமே இந்த நிழ்ச்சியில் கடல் கடந்து வந்து பாட ஆசைப்பட்டதாகவும் அசானி கண்ணீருடன் கூறினார்.

அசானியின் திறமையை கண்டு நிகழ்ச்சியை பார்வையிட வந்த அனைவரும் கண்கலங்கியதுடன் மிகுந்த வரவேற்பையும் அளித்தனர்.

அசானி அடுத்துவரும் வாரங்களில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் சரிகமப நிழ்ச்சியில் தொடர்ந்து பாட அனுமதியளிக்க நடுவர்கள் தீர்மானிப்பார்கள் என எல்லோரும் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles