சிறுமியொருவரை பாலியல் வன்புணர்ந்த நபர் ஒருவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.