Monday, November 10, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்.பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருடத்தில் பயின்ற மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடொன்றில் சக மாணவிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில் நேற்று மாணவி விரிவுரைக்கு செல்லாது அறையில் தனித்து இருந்ததாகவும், சக மாணவிகள் அறைக்கு வந்த வேளை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles