மெக்சிகோவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் இருந்து டிஜுவானா நகருக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஒன்று பர்ரான்கா பிளாங்கா பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள், சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.