முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரகெட்டிய இல்லத்தில் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 – 15 ஆம் திகதி வரை நடைபெற்ற நிகழ்வொன்றுக்காக பாதுகாப்பு விளக்குகளை பொறுத்துமாறு கூறியிருந்ததாகவும், அதற்காக 2,682,246 ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை இலங்கை மின்சார சபைக்கு அனுப்பிய கேள்விக்கு வழங்கப்பட்ட பதிலில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
