Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதன் உயிரை மாய்த்துக் கொண்ட வைத்தியர்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட வைத்தியர்

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக இல்லத்திலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த வைத்தியர் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார்.

தன்னுடைய இந்த தற்கொலை தீர்மானத்துக்காக எவரையும் சந்தேகிக்க வேண்டாம் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

42 வயதுடைய வைத்தியர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான வேறு காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனையின் போது தற்கொலை செய்துக்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles