லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அண்மையில் சிறுநீரக சத்திரசிகிச்சையில் உயிரிழந்த ஹம்தி ஃபஸ்லின் (3) என்ற சிறுவனின் பிரேத பரிசோதனை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சட்ட வைத்தியரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் இடைநிறுத்தப்பட்ட கொழும்பு மரண விசாரணை அதிகாரி ருஹுல் ஹக்கினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளதாக மருத்துவ சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.