தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இன்று (04) மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இரண்டு தொழிலாளர்களும், ஒரு இளைஞனுமே குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் ஆவர்.
கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு ஒன்று கலைந்து இவர்களை கொட்டியுள்ளது.
பின்னர் இவர்கள், உடனடியாக தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.