மொனராகலை கோணகங்கார பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை நேர்ந்த இந்த அனர்த்தத்தில் 63 வயதான பெண்ணொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விவசாய காணியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது யானையின் தாக்குதலுக்கு குறித்த பெண் இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
