கந்தானை – பியோ மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று (04) காலை 6 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
T-56 துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், இதன் காரணமாக வீட்டின் பல பாகங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.