கடந்த நான்கு மாதங்களாக எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் இன்சுலின் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது இன்சுலின் பற்றாக்குறை நிலவுகிறது.
இன்சுலின் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோயளர் ஒருவருக்கு வழங்கக்கூடிய சிகிச்சை என்ன என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.
இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். அவர்களின் நிலைமை என்ன? இலங்கையின் சுகாதார துறையில் 4 மாதங்களாக இன்சுலின் மருந்து இல்லை என்பது கவலையாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.