Monday, November 10, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈரான் செல்கிறார் அலி சப்ரி

ஈரான் செல்கிறார் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகஸ்ட் 04 – 07 வரை ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரைசியை மரியாதை நிமித்தம் அலி சப்ரி சந்திக்கவுள்ளார்.

அதேநேரம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுடன் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles